/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கழிவுநீர் கால்வாய் அமைத்து தர மக்கள் வேண்டுகோள்
/
கழிவுநீர் கால்வாய் அமைத்து தர மக்கள் வேண்டுகோள்
ADDED : பிப் 05, 2025 01:15 AM
கழிவுநீர் கால்வாய் அமைத்து தர மக்கள் வேண்டுகோள்
அரவக்குறிச்சி : சாக்கடை வசதி இல்லாததால், தேங்கி நிற்கும் கழிவு நீர், சாலையில் ஓடுவதால் வாகன ஓட்டிகளுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
பள்ளப்பட்டியில் இருந்து, திண்டுக்கல் செல்லும் சாலை வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்த சாலையில் பள்ளிகள், மின்வாரிய அலுவலகம் மற்றும் வணிக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. சாலையில் கால்வாய் இல்லாததால், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி எதிரே பள்ளமான பகுதியில் கழிவு நீர் தேங்கி விடுகிறது.
தேங்கிய கழிவு நீர் நிரம்புவதால், சாலையில் கழிவுநீர் செல்லும் அவல நிலை காணப்படுகிறது. சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் நோய் தொற்று ஏற்பட்டு விடுமோ என அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தை பார்வையிட்டு, இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண
நடவடிக்கை எடுக்க வேண்டும்.