/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையின் இருபுறமும் கான்கிரீட்மூடி அமைக்க வேண்டுகோள்
/
சாலையின் இருபுறமும் கான்கிரீட்மூடி அமைக்க வேண்டுகோள்
சாலையின் இருபுறமும் கான்கிரீட்மூடி அமைக்க வேண்டுகோள்
சாலையின் இருபுறமும் கான்கிரீட்மூடி அமைக்க வேண்டுகோள்
ADDED : பிப் 08, 2025 12:51 AM
சாலையின் இருபுறமும் கான்கிரீட்மூடி அமைக்க வேண்டுகோள்
அரவக்குறிச்சி: நான்கு மாதங்களுக்கு முன், கழிவுநீர் கால்வாயில் சிறுவன் உயிரிழந்த நிலையில், தற்போது வரை கான்கிரீட் மூடி அமைக்கப்படவில்லை.
பள்ளப்பட்டியில் இருந்து, திண்டுக்கல் செல்லும் சாலையின் இருபுறமும், ராட்சத கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன், இந்த கழிவு நீர் கால்வாயில் பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் தவறி விழுந்து, ஆற்றில் அடித்து செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கழிவுநீர் கால்வாய் மேல் கான்கிரீட் மூடி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் நான்கு மாதங்களுக்கு மேலாகியும், தற்போது வரை கான்கிரீட் மூடி அமைக்கப்படாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்படுவதற்குள், கழிவு நீர் கால்வாய்க்கு கான்கிரீட் மூடி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.