/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தரகம்பட்டியில் அரசு கலை கல்லுாரி திறப்பு
/
தரகம்பட்டியில் அரசு கலை கல்லுாரி திறப்பு
ADDED : பிப் 15, 2025 02:01 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, தரங்கம்பட்டியில் அரசு கலை கல்லுாரி திறக்கப்பட்டது.அரசு கலை கல்லூரிக்கு என புதிய கட்டடம், கடந்த ஆண்டு, 12.46 கோடி மதிப்பில் மூன்று தளங்களில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் கொண்டு அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
தற்போது, கட்டுமான பணிகள் நிறைவடைந்து, நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக, கல்லுாரி கட்டடத்தை திறந்து வைத்தார்.
இதையடுத்து கலெக்டர் தங்கவேல், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணி, குளித்தலை ஆர்.டி.ஓ., கருணாகரன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி, மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கினர்.
டி.எஸ்.பி.. செந்தில்குமார், கடவூர் தாசில்தார் சுந்தரவள்ளி, மாஜி யூனியன் கவுன்சிலர் கோமதி பிரபாகரன், அரசு ஒப்பந்ததாரர் செந்தில்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

