/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்அறிவியல் கண்காட்சி தொடக்கம்
/
புகழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்அறிவியல் கண்காட்சி தொடக்கம்
புகழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்அறிவியல் கண்காட்சி தொடக்கம்
புகழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்அறிவியல் கண்காட்சி தொடக்கம்
ADDED : பிப் 19, 2025 01:47 AM
புகழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்அறிவியல் கண்காட்சி தொடக்கம்
கரூர்: கரூர் மாவட்டம், புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் கண்காட்சி தொடக்க விழா நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் வளர்மதி தலைமை வகித்தார். கரூர் ஆர்.டி.ஓ., முகம்மது பாசில் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சுற்றுச்சூழல் போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பசுமை பள்ளியில் அமைந்துள்ள திட்டங்களை, கரூர் மாவட்ட வன அலுவலர் சண்முகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இங்கு, சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை தடுப்பது முதலான அறிவியல் தொடர்பாக, 50 படைப்புகள் வைக்கப்பட்டு கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி உதவி தலைமையாசிரியர் பொன்னுசாமி, தாவரவியல் ஆசிரியர் ஜெரால்டு உள்பட பலர் பங்கேற்றனர்.