/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சந்தை அருகே வாகன போக்குவரத்தைமுறைப்படுத்த நடவடிக்கை தேவை
/
சந்தை அருகே வாகன போக்குவரத்தைமுறைப்படுத்த நடவடிக்கை தேவை
சந்தை அருகே வாகன போக்குவரத்தைமுறைப்படுத்த நடவடிக்கை தேவை
சந்தை அருகே வாகன போக்குவரத்தைமுறைப்படுத்த நடவடிக்கை தேவை
ADDED : பிப் 19, 2025 02:22 AM
சந்தை அருகே வாகன போக்குவரத்தைமுறைப்படுத்த நடவடிக்கை தேவை
கரூர்:கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, பெரியகுளத்துப்பாளையம் வாரச்சந்தை பகுதியில், வாகன போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் என, அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, வெங்கமேடு பகுதியில் இருந்து பெரியகுளத்துப்பாளையம் செல்லும் சாலையோரம், ஞாயிறுதோறும் வாரச்சந்தை செயல்படுகிறது. கரூர், வெங்கமேடு, குளத்துப்பாளையம், வாங்கப்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வாரச்ந்தைக்கு வந்து தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். வாரச்சந்தை நடைபெறும் சாலையில், வெங்கமேடு பகுதியில் இருந்து இனாம் கருர், குளத்துப்பாளையம், பெரியகுளத்துப்பாளையம், சேலம் நெடுஞ்சாலை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சாலை வழியாக செல்கிறது. இதனால் இந்த பகுதியில், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே வாரச்சந்தை நடைபெறும் நாளன்று, போக்குவரத்து விதிகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.