/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டி.என்.பி.எல்., சார்பில் இலவசமார்பக புற்றுநோய் பரிசோதனை
/
டி.என்.பி.எல்., சார்பில் இலவசமார்பக புற்றுநோய் பரிசோதனை
டி.என்.பி.எல்., சார்பில் இலவசமார்பக புற்றுநோய் பரிசோதனை
டி.என்.பி.எல்., சார்பில் இலவசமார்பக புற்றுநோய் பரிசோதனை
ADDED : பிப் 19, 2025 02:31 AM
டி.என்.பி.எல்., சார்பில் இலவசமார்பக புற்றுநோய் பரிசோதனை
கரூர்:புகழூர் டி.என்.பி.எல்., ஆலை சார்பில், பெண்களுக்கு இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் வரும், 22ம் தேதி வரை நடக்கிறது.
புகழூர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில், உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் பெண்களுக்கான இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் நடந்து வருகிறது. ஆலை குடியிருப்பு வளாகத்தில் பொதுமேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் முகாமை தொடங்கி வைத்து கூறியதாவது: புற்றுநோய் குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் முகாமில் தினமும், 35 பேருக்கு பரிசோதனை நடக்கிறது. 4,000 ரூபாய் மதிப்புள்ள யு.எஸ்.ஜி., பி.ஏ.பி., ஸ்மியர் ரேண்டம் பிளட் சுகர் போன்ற பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது. வரும், 22ம் தேதி வரை முகாம் நடைபெறுவதால், பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.
ஆலையின் முதன்மை மேலாளர் (மனிதவளம்) வெங்கடேசன், சுகாதார மைய டாக்டர் ராஜா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.