/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி சாலையில் கழிவுநீர்கால்வாய் அமைத்து தர வேண்டும்
/
அரவக்குறிச்சி சாலையில் கழிவுநீர்கால்வாய் அமைத்து தர வேண்டும்
அரவக்குறிச்சி சாலையில் கழிவுநீர்கால்வாய் அமைத்து தர வேண்டும்
அரவக்குறிச்சி சாலையில் கழிவுநீர்கால்வாய் அமைத்து தர வேண்டும்
ADDED : பிப் 22, 2025 01:47 AM
அரவக்குறிச்சி சாலையில் கழிவுநீர்கால்வாய் அமைத்து தர வேண்டும்
அரவக்குறிச்சி:பள்ளப்பட்டியில் இருந்து, அரவக்குறிச்சி செல்லும் சாலையில்
கழிவுநீர் கால்வாய் இல்லாததால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலை, 5 கி.மீ., துாரம் கொண்டது.
அரவக்குறிச்சி சந்தை முதல், பள்ளப்பட்டி அண்ணா நகர் வரை சாலையோர கழிவுநீர் கால்வாய் இதுவரை அமைக்கப்படவில்லை.
சாலையோரங்களில் உள்ள குடியிருப்புகள், உணவகங்கள், டீக்கடைகள் ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சாலையோரங்களிலேயே தேங்கி விடுவதால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில், கழிவுநீர் கால்வாய் அமைத்து தர குடியிருப்பு வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.