/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்ட போலீசாருக்கு மத்தியஅரசு பதக்கம்: எஸ்.பி., வழங்கல்
/
மாவட்ட போலீசாருக்கு மத்தியஅரசு பதக்கம்: எஸ்.பி., வழங்கல்
மாவட்ட போலீசாருக்கு மத்தியஅரசு பதக்கம்: எஸ்.பி., வழங்கல்
மாவட்ட போலீசாருக்கு மத்தியஅரசு பதக்கம்: எஸ்.பி., வழங்கல்
ADDED : பிப் 23, 2025 01:39 AM
மாவட்ட போலீசாருக்கு மத்தியஅரசு பதக்கம்: எஸ்.பி., வழங்கல்
கரூர்:கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், போலீசாருக்கு மத்திய அரசு பதக்கங்களை, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா வழங்கினார்.
காவல் துறையில், 25 ஆண்டுகள் எந்தவித தண்டனையும் இல்லாமல், பணிபுரியும் போலீசாருக்கு, அதி உத்கிரிஸ் சேவாக் பதக்கமும், 20 ஆண்டுகள் எந்தவித தண்டனையும் இல்லாமல் பணிபுரிபவர்களுக்கு உத்கிரிஸ் சேவாக் பதக்கமும் மத்திய அரசு வழங்கி வருகிறது.அதன்படி, கரூர் மாவட்டத்தில் அதி உத்கிரிஸ் சேவாக் பதக்கத்தை எஸ்.ஐ.,க்கள் சகாயராஜ், காளிமுத்து, உதயகுமார், வாசு, சக்திவேல் ஆகியோருக்கும், உத்கிரிஸ் சேவாக் பதக்கத்தை எஸ்.எஸ்.ஐ.,க்கள் பரிமளம், குப்புசாமி, கந்தசாமி, பாபி ஆகியோருக்கு வழங்கி மத்திய அரசு சமீபத்தில் உத்தர
விட்டது. இதையடுத்து, நேற்று கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடந்த, கவாத்து பயிற்சியில், மத்திய அரசின் பதக்கங்களை தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா வழங்கினார், ஏ.டி.எஸ்.பி., பிரேம் ஆனந்தன் உடனிருந்தார்.