/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காஜியை நியமனம் செய்ய கலெக்டர்தலைமையில் தேர்வுக்குழு அமைப்பு
/
காஜியை நியமனம் செய்ய கலெக்டர்தலைமையில் தேர்வுக்குழு அமைப்பு
காஜியை நியமனம் செய்ய கலெக்டர்தலைமையில் தேர்வுக்குழு அமைப்பு
காஜியை நியமனம் செய்ய கலெக்டர்தலைமையில் தேர்வுக்குழு அமைப்பு
ADDED : மார் 06, 2025 01:25 AM
காஜியை நியமனம் செய்ய கலெக்டர்தலைமையில் தேர்வுக்குழு அமைப்பு
கரூர்:-கரூர் மாவட்டத்தில், முஸ்லிம் இன மக்களின் பிரதிநிதியாக மாவட்ட காஜி நியமனம் செய்ய, கலெக்டர் தலைமையில், ஏழு உறுப்பினர்களை கொண்ட நியமன தேர்வுக்குழு அமைக்கப்படவுள்ளது. இந்த குழுவில் ஐந்து உலமாக்கள் உறுப்பினர்களும், இரண்டு முக்கிய முஸ்லிம் பிரமுகர்களும் உறுப்பினர்களாக இடம் பெறலாம்.
உலமாக்கள் உறுப்பினருக்கு விண்ணப்பிக்க, ஆலிம் அல்லது பாசில் அல்லது முப்தி படிப்பு படித்திருக்க வேண்டும். அல்லது அரபு கல்லுாரியிலோ அல்லது அதற்கிணையான கல்வி நிறுவனத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும். சமுதாய முன்னேற்றத்தில் அக்கரை உடையவராகவும், சமுதாயத்தில் நல்ல மனிதன் என்று பேசப்படுபவராகவும் இருத்தல் வேண்டும். இதுபோல, மாவட்ட காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆலிம் படிப்பு அல்லது பாசில் படிப்பு அல்லது இஸ்லாமிய நீதித்துறை நன்கு அறிந்தவர்கள் அல்லது அரபு கல்லுாரியிலோ அல்லது அதற்கிணையான கல்வி நிறுவனத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும்.
காஜி தேர்வு குழுவில் இடம் பெற விரும்புவோர் மற்றும் காஜி நியமனத்திற்கு வரும், 17-க்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை நேரில் சமர்ப்பிக்க வேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. காஜி நியமன பட்டியலில் இடம் பெறுவோர், மாவட்ட அளவிலான தேர்வு குழுவில் இடம் பெற முடியாது.