/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பா.ஜ., நிர்வாகி மீண்டும்அ.தி.மு.க.,வுக்கு தாவல்
/
பா.ஜ., நிர்வாகி மீண்டும்அ.தி.மு.க.,வுக்கு தாவல்
ADDED : மார் 06, 2025 01:26 AM
பா.ஜ., நிர்வாகி மீண்டும்அ.தி.மு.க.,வுக்கு தாவல்
கரூர்:பா.ஜ., நிர்வாகி மீண்டும் நேற்று, அ.தி.மு.க.,வில் இணைந்தார்.கரூர் மாவட்டம், குளித்தலையை சேர்ந்தவர் டாக்டர் கதிரேசன். இவர், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணியில் சேர்ந்தார். பிறகு, சில மாதங்களுக்கு முன், பா.ஜ.,வில் கதிரேசன் இணைந்தார். அவருக்கு, மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று, பா.ஜ.,வில் இருந்து விலகி, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் முன்னிலையில், கதிரேசன் அக்கட்சியில் இணைந்தார்.
அப்போது, மாவட்ட பொருளாளர் கண்ண தாசன், ஒன்றிய செயலாளர்கள் விஜய விநாய கம், கருணாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.