/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாம்பல் புதன் வழிபாட்டுடன்கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்
/
சாம்பல் புதன் வழிபாட்டுடன்கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்
சாம்பல் புதன் வழிபாட்டுடன்கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்
சாம்பல் புதன் வழிபாட்டுடன்கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்
ADDED : மார் 06, 2025 01:27 AM
சாம்பல் புதன் வழிபாட்டுடன்கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்
கரூர்:-சாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியது. இதையடுத்து, கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
இயேசு, வனாந்தரத்தில் நோன்பு இருந்த, 40 நாட்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பர். இது தவக்காலம், தபசு காலம், இலையுதிர் காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில், கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்து தம்மை தாமே வெறுத்து, தங்களுக்கு பிடித்த காரியங்களை தவிர்த்து, இயேசுவை தியானிப்பர். உண்ணும் உணவு, உடைகள் ஆகியவற்றில் அலங்காரங்களை தவிர்த்து, பிறருக்கு உதவி செய்து ஆன்மிக வலிமையை இக்கால கட்டத்தில் பெறுவர்.
தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன், நேற்று அனுசரிக்கப்பட்டது. ஓலையிலான சிலுவைகளை எரித்து, அதன் சாம்பலை நெற்றியில் பூசி கொள்வது வழக்கம். இதன்படி, கரூர் புனித தெரசாமாள் ஆலயத்தில் நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. சிறப்பு வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பலை பூசினர். தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கும் சாம்பல் புதன் வழிபாடு நடந்தது.
இதேபோல், கரூர் பசுபதிபாளையம் புனித கார்மல் ஆலயம், புலியூர் குழந்தையேசு ஆலயம், வேலாயுதம்பாளையம் புனித அந்தோணியார் ஆலயம் ஆகியவற்றிலும் சிறப்பு திருப்பலி நடந்தது.