/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிமென்ட் லோடுடன் சென்ற லாரி தீப்பற்றி எரிந்தது
/
சிமென்ட் லோடுடன் சென்ற லாரி தீப்பற்றி எரிந்தது
ADDED : மார் 07, 2025 01:57 AM
சிமென்ட் லோடுடன் சென்ற லாரி தீப்பற்றி எரிந்தது
அரவக்குறிச்சி,:கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, லாரி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுதாரித்து கொண்ட லாரி ஓட்டுனர், கீழே இறங்கியதால் அவர் உயிர் தப்பினார்.
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் மோனச்சன், 58. இவர் டாரஸ் லாரியில், திண்டுக்கல் மாவட்டம் கரிக்காலியில் இருந்து, சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, கேரளா மாநிலம், பாலக்காடு செல்வதற்காக, பாளையத்திலிருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு மேல் சென்று கொண்டிருந்தார். அப்போது, அரவக்குறிச்சி வளையப்பட்டி பிரிவு அருகே சென்ற போது, லாரியில் திடீரென தீப்பற்றியது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த மோனச்சன், சுதாரித்து கொண்டு லாரியை விட்டு கீழே இறங்கினார்.
இந்நிலையில் சிறிது நேரத்தில், லாரி முழுவதும் தீ பரவியது. இது குறித்து அரவக்குறிச்சி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அரவக்குறிச்சி தீயணைப்பு துறையினரின் வாகனம், கரூர் குப்பை கிடங்கிற்கு பணி காரணமாக சென்றதால், குஜிலியம்பாறை பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு துறை வாகனம் வந்தது. பின்னர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். ஆனாலும் லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது.
விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து, அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.