/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் நாளை பெண்கள் பாதுகாப்புவிழிப்புணர்வு மாரத்தான் போட்டி
/
கரூரில் நாளை பெண்கள் பாதுகாப்புவிழிப்புணர்வு மாரத்தான் போட்டி
கரூரில் நாளை பெண்கள் பாதுகாப்புவிழிப்புணர்வு மாரத்தான் போட்டி
கரூரில் நாளை பெண்கள் பாதுகாப்புவிழிப்புணர்வு மாரத்தான் போட்டி
ADDED : மார் 07, 2025 01:57 AM
கரூரில் நாளை பெண்கள் பாதுகாப்புவிழிப்புணர்வு மாரத்தான் போட்டி
கரூர்,:-பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, நாளை நடக்கிறது என, கரூர் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் இருந்து, பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, நாளை (8ம் தேதி) காலை, 6:00 மணிக்கு நடக்கிறது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கான இலவச உதவி மைய எண். 181 மற்றும் காவல் உதவி செயலி மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 5 கி.மீ., மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது.
இந்த ஓட்டம், ஜவஹர் பஜார், தைலா சில்க்ஸ், பழைய அரசு மருத்துவமனை சாலை, தின்னப்பா தியேட்டர், எம்.ஜி., சாலை, 80 அடி சாலை, கோவை ரோடு, கரூர் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா வழியாக திருவள்ளுவர் மைதானத்தில் நிறைவு பெறுகிறது. கல்லுாரி பெண்கள், மகளிர் போலீசார் என மொத்தம், 500 பேர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.