/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஹோட்டல் தொடர்பான பட்டப்படிப்புவிண்ணப்பிக்க அழைப்பு: கலெக்டர்
/
ஹோட்டல் தொடர்பான பட்டப்படிப்புவிண்ணப்பிக்க அழைப்பு: கலெக்டர்
ஹோட்டல் தொடர்பான பட்டப்படிப்புவிண்ணப்பிக்க அழைப்பு: கலெக்டர்
ஹோட்டல் தொடர்பான பட்டப்படிப்புவிண்ணப்பிக்க அழைப்பு: கலெக்டர்
ADDED : மார் 07, 2025 02:02 AM
ஹோட்டல் தொடர்பான பட்டப்படிப்புவிண்ணப்பிக்க அழைப்பு: கலெக்டர்
கரூர்,:-தாட்கோ மூலம், ஹோட்டல் தொடர்பான பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ, மாணவியருக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகள் சேர்ந்து படித்திட விண்ணப்பிக்கலாம்.
இந்நிறுவனமானது மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ், தன்னாட்சி பெற்றுள்ளது. இதில், மொத்த மதிப்பெண்ணில், 45 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு, 3 லட்சம் ரூபாய் இருக்க வேண்டும். இப்பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.