/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் சாலைகளில் தென்படும் கானல் நீர்
/
கரூர் சாலைகளில் தென்படும் கானல் நீர்
ADDED : மார் 08, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் சாலைகளில் தென்படும் கானல் நீர்
கரூர்:கரூரில், வெப்பம் அதிகரித்து, தேசிய நெடுஞ்சாலைகளில் கானல் நீர் தென்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
தமிழகத்தில், கோடை காலம் தொடங்கிய நிலையில் திருப்பத்துார், ஈரோடு மாவட்டங்களில், வெயிலின் தாக்கம், 100 டிகிரியை தாண்டிய நிலையில் உள்ளது. கரூரில் நேற்று, 100.2 டிகிரி வெயில் அடித்தது. கரூர் நகரை சுற்றி மதுரை, சேலம், திருச்சி, கோவை ஆகிய பகுதிகளுக்கு நெடுஞ்சாலைகள் செல்கின்றன. நேற்று கோடை வெயில் காரணமாக, தேசிய நெடுஞ்சாலைகளில் கானல் நீர் ஆங்காங்கே தென்பட்டது. இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் வெப்பத்தின் தாக்கத்தால் அவதியடைந்தனர்.