/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகளிர் தினத்தையொட்டி காவல்துறை சார்பில் மாரத்தான் போட்டி
/
மகளிர் தினத்தையொட்டி காவல்துறை சார்பில் மாரத்தான் போட்டி
மகளிர் தினத்தையொட்டி காவல்துறை சார்பில் மாரத்தான் போட்டி
மகளிர் தினத்தையொட்டி காவல்துறை சார்பில் மாரத்தான் போட்டி
ADDED : மார் 09, 2025 02:03 AM
மகளிர் தினத்தையொட்டி காவல்துறை சார்பில் மாரத்தான் போட்டி
கரூர்:கரூர் மாவட்ட காவல் துறை சார்பில், மகளிர் தினத்தையொட்டி, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு தொடர்பாக, விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.
கரூர், திருவள்ளுவர் மைதானத்தில் இருந்து தொடங்கிய பேரணியை, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி ஜவஹர் பஜார், பழைய அரசு மருத்துவமனை சாலை, எம்.ஜி., சாலை, 80 அடி சாலை, கோவை சாலை, பஸ் ஸ்டாண்ட் வழியாக மீண்டும், திருவள்ளுவர் மைதானத்தை அடைந்தது. பிறகு, மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஏ.டி.எஸ்.பி., பிரேம் ஆனந்த், டி.எஸ்.பி., செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், முத்துக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.