/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வனத்துறை சார்பில் இரு நாட்கள்பறவை கணக்கெடுப்பு பணி
/
வனத்துறை சார்பில் இரு நாட்கள்பறவை கணக்கெடுப்பு பணி
வனத்துறை சார்பில் இரு நாட்கள்பறவை கணக்கெடுப்பு பணி
வனத்துறை சார்பில் இரு நாட்கள்பறவை கணக்கெடுப்பு பணி
ADDED : மார் 13, 2025 02:07 AM
வனத்துறை சார்பில் இரு நாட்கள்பறவை கணக்கெடுப்பு பணி
கரூர்:- வரும், 15, 16 ஆகிய நாட்களில் நிலப்பரப்புகளில் பறவை கணக்கெடுப்பு பணி நடக்கிறது. தமிழ்நாடு வனத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஈரநிலங்கள் மற்றும் நிலப்பரப்புகளில் வாழும் பறவைகளை, கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில், கடந்த வாரம் ஈரநிலம் கணக்கெடுப்பு முடிந்த நிலையில் வரும், 15, 16 தேதிகளில் நிலப்பரப்புகளில் பறவை கணக்கெடுப்பு பணிநடக்கிறது. பல்வேறு வனப்பகுதிகள், நிலப்பரப்புகள் மற்றும் இதர இடங்களில் காணப்படும் பறவைகளின் எண்ணிக்கை, வகைகள் மற்றும் அவற்றின் வாழ்வாதாரத்தை பற்றிய தரவுகளை சேகரிக்கும் வகையில் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இந்நிகழ்வில் பறவை வல்லுனர்கள், உயிரியில் மற்றும் விலங்கியல் வல்லுனர்கள், கல்லுாரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொள்ளலாம். பிற மாவட்டங்களில் உள்ள பறவை வல்லுனர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, வனச்சரக அலுவலர்கள் முரளிதரன் மொபைல் எண், 91767 68768, கனகராஜ் மொபைல் எண், 97885 78344 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.