/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசியல் கோமாளி அண்ணாமலைசெந்தில் பாலாஜி கடும் தாக்கு
/
அரசியல் கோமாளி அண்ணாமலைசெந்தில் பாலாஜி கடும் தாக்கு
அரசியல் கோமாளி அண்ணாமலைசெந்தில் பாலாஜி கடும் தாக்கு
அரசியல் கோமாளி அண்ணாமலைசெந்தில் பாலாஜி கடும் தாக்கு
ADDED : மார் 14, 2025 01:32 AM
அரசியல் கோமாளி அண்ணாமலைசெந்தில் பாலாஜி கடும் தாக்கு
குளித்தலை:''தமிழகத்தின் அரசியல் கோமாளி அண்ணாமலை,'' என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.
கரூர் மாவட்டம், குளித்தலை பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் இரவு, தி.மு.க., சார்பில் மும்மொழி கொள்கை எதிர்ப்பு மற்றும் தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து, மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாம சுந்தரி, ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.இதையடுத்து, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:தமிழகத்தின் அரசியல் கோமாளி பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை. மும்மொழி கொள்கையை ஆதரிக்கும் அவர், லண்டனுக்கு படிப்பிற்காக சென்றபோது ஹிந்தி பேசினாரா அல்லது ஆங்கிலம் பேசினாரா என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். அண்ணாமலை காலையில் ஒரு பேச்சு, மதியம் ஒரு பேச்சு, இரவு ஒரு பேச்சு என்ற நிலையில்தான் உள்ளார். தமிழக மக்களுக்காக, பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இந்தியா மட்டுமின்றி, உலகிற்கே பல்வேறு திட்டங்களுக்கு எடுத்துக்காட்டாக செயல்படுபவர் முதல்வர் ஸ்டாலின்.
இவ்வாறு பேசினார்.முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.