/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம்
/
கரூரில் பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம்
ADDED : மார் 14, 2025 02:06 AM
கரூரில் பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம்
கரூர்:மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.,ஜ., சார்பில், 'சமக்கல்வி எங்கள் உரிமை' என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மாநில தலைவர் அண்ணாமலை, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். கரூர் வேலுசாமிபுரத்தில், பா.ஜ., மேற்கு மாநகரம் சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது. மாநகர தலைவர் பவானி துரைப்பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தொடங்கி வைத்தார்.
மாவட்ட பொதுச்செயலர்கள் ஆறுமுகம், சக்திவேல் முருகன், மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணி, ராணுவ பிரிவு மாவட்ட தலைவர் ரத்னம், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் சரவண பாலாஜி மற்றும் முருகேசன், வெங்கடாசலம் உள்பட பலர் பங்கேற்றனர்.