/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் பஸ் ஸ்டாண்டில் வெயிலில் நிற்கும் பயணிகள்
/
கரூர் பஸ் ஸ்டாண்டில் வெயிலில் நிற்கும் பயணிகள்
ADDED : மார் 15, 2025 02:09 AM
கரூர் பஸ் ஸ்டாண்டில் வெயிலில் நிற்கும் பயணிகள்
கரூர்:கரூர் பஸ் ஸ்டாண்டில், வெயிலில் பொது மக்கள், திறந்த வெளியில் பஸ்சுக்காக காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், தொழில் நகரத்தில் ஒன்றான கரூரில், பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, சுத்தம் இல்லாத கழிப்பிடங்கள், குண்டும், குழியுமான தரைத்தளங்கள், ஆக்கிரமிப்புகள் என பல குறைபாடுகள், பஸ் ஸ்டாண்டில் நிறைந்துள்ளது.
மேலும், குடிநீர் வசதி, மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் நிற்க கூட அடிப்படை வசதி இல்லை.
இந்நிலையில், கரூரில் கடந்த சில நாட்களாக, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அப்போது பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் நிற்க உரிய இடம் இல்லாததால், திறந்த வெளியில் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, தென்னங்கீற்று பந்தல் அல்லது ெஷட் அமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.