/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மருதுாரில் குற்றவாளிகளை கண்டறிய'சிசிடிவி' கேமரா பொருத்தும் பணி
/
மருதுாரில் குற்றவாளிகளை கண்டறிய'சிசிடிவி' கேமரா பொருத்தும் பணி
மருதுாரில் குற்றவாளிகளை கண்டறிய'சிசிடிவி' கேமரா பொருத்தும் பணி
மருதுாரில் குற்றவாளிகளை கண்டறிய'சிசிடிவி' கேமரா பொருத்தும் பணி
ADDED : மார் 20, 2025 01:12 AM
மருதுாரில் குற்றவாளிகளை கண்டறிய'சிசிடிவி' கேமரா பொருத்தும் பணி
குளித்தலை:குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்.,ல், 15 வார்டுகள் உள்ளன. டவுன் பஞ்., பகுதியில் உள்ள கிராமங்களில், குற்றச்செயல்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியும் வகையிலும், 'சிசிடிவி' கேமரா பொருத்தி குற்றங்கள் இல்லாத பஞ்சாயத்தாக செயல்படும் வகையில் அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் துணைத்தலைவர் நாகராஜன் ஆகியோர் தீர்மானம் கொண்டு வந்தனர்.
கோரிக்கையை ஏற்று டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா தலைமையில், செயல் அலுவலர் பானு ஜெயராணி முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, டவுன் பஞ்.,ல், நமக்கு நாமே திட்டத்தில் இருந்து நான்கு லட்சம் மற்றும் வீடு தொண்டு நிறுவனம் பங்களிப்பாக ஒரு லட்சம் என, ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது முதல் கட்டமாக மருதுார் மற்றும் மேட்டு மருதுார் கிராமத்தில், 'சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.