/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'டாஸ்மாக்'கில் முதல்வர் படம் பா.ஜ., நிர்வாகிகள் மீது வழக்கு
/
'டாஸ்மாக்'கில் முதல்வர் படம் பா.ஜ., நிர்வாகிகள் மீது வழக்கு
'டாஸ்மாக்'கில் முதல்வர் படம் பா.ஜ., நிர்வாகிகள் மீது வழக்கு
'டாஸ்மாக்'கில் முதல்வர் படம் பா.ஜ., நிர்வாகிகள் மீது வழக்கு
ADDED : மார் 22, 2025 01:27 AM
'டாஸ்மாக்'கில் முதல்வர் படம் பா.ஜ., நிர்வாகிகள் மீது வழக்கு
கரூர்:கரூர் அருகே, டாஸ்மாக் மதுபான கடை முன், முதல்வர் படம் ஒட்டியதாக, பா.ஜ., நிர்வாகிகள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் டாஸ்மாக் மதுபான கடை முன், நேற்று முன்தினம், கரூர் மேற்கு நகர பா.ஜ., தலைவர் பவானி தலைமையில், அக்கட்சியினர் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டினர். அப்போது, போலீசாருக்கும், பா.ஜ.,வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, பா.ஜ., நிர்வாகிகளை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
இதுகுறித்து, டாஸ்மாக் மதுபான கடை கண்காணிப்பாளர் முனியப்பன், 55, கொடுத்த புகாரின்படி, கரூர் டவுன் போலீசார் மேற்கு நகர பா.ஜ., தலைவர் பவானி, முன்னாள் ஐ.டி., விங்க் தலைவர் மாரிமுத்து உள்பட, 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.