/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பூட்டப்பட்ட மக்கள் காத்திருப்பு அறைதாலுகா அலுவலகம் வந்தவர்கள் அவதி
/
பூட்டப்பட்ட மக்கள் காத்திருப்பு அறைதாலுகா அலுவலகம் வந்தவர்கள் அவதி
பூட்டப்பட்ட மக்கள் காத்திருப்பு அறைதாலுகா அலுவலகம் வந்தவர்கள் அவதி
பூட்டப்பட்ட மக்கள் காத்திருப்பு அறைதாலுகா அலுவலகம் வந்தவர்கள் அவதி
ADDED : மார் 22, 2025 01:28 AM
பூட்டப்பட்ட மக்கள் காத்திருப்பு அறைதாலுகா அலுவலகம் வந்தவர்கள் அவதி
கரூர்:கரூர் தாலுகா அலுவலகத்தில், காத்திருப்பு அறை பூட்டப்பட்டதால், பொதுமக்கள் உட்கார முடியாமல் அவதிப்பட்டனர்.
கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில், கிளை சிறை, இ-சேவை மையம், வட்ட வழங்கல் அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட, பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதனால், பொதுமக்கள் வசதிக்காக, கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில், காத்திருப்பு அறை கட்டப்பட்டுள்ளது. நாள்தோறும் தாலுகா அலுவலகத்துக்கு பல்வேறு பணிக்காக, பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர்.
ஆனால், காத்திருப்பு அறை பூட்டப்பட்டிருப்பதால், பொதுமக்கள் திறந்த வெளியில், கொளுத்தும், கோடை வெயிலில் தரையில் உட்காரும் அவல நிலை உள்ளது. மேலும், பலர் நீண்ட நேரம் தரையில் உட்கார முடியாமல் அருகில் உள்ள, கடைகளில் தஞ்சம் புகுந்தனர். இதனால், பொதுமக்கள் காத்திருப்பு அறையை திறந்து வைக்க, தாலுகா அலுவலகம் செயல்படும் நாட்களில், வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.