/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் தி.மு.க., அரசை கண்டித்துபா.ஜ., கருப்பு கொடி போராட்டம்
/
கரூரில் தி.மு.க., அரசை கண்டித்துபா.ஜ., கருப்பு கொடி போராட்டம்
கரூரில் தி.மு.க., அரசை கண்டித்துபா.ஜ., கருப்பு கொடி போராட்டம்
கரூரில் தி.மு.க., அரசை கண்டித்துபா.ஜ., கருப்பு கொடி போராட்டம்
ADDED : மார் 23, 2025 12:59 AM
கரூரில் தி.மு.க., அரசை கண்டித்துபா.ஜ., கருப்பு கொடி போராட்டம்
கரூர்:தி.மு.க., அரசை கண்டித்து, கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என, பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன்படி, தி.மு.க., அரசை கண்டித்து கரூரில், ஈரோடு சாலை வீனஸ் நகரில் உள்ள தனது வீட்டின் முன், பா.ஜ., கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடந்தது.
பின், அவர் கூறியதாவது:கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து தென்காசி, கோவை என எல்லையோர மாவட்டங்களில், மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். முல்லை பெரியாறு அணை பிரச்னை தீர்க்கப்படவில்லை. கர்நாடகாவை பொறுத்தவரை, நீண்டகாலமாக இருக்கும் காவிரி பிரச்னையில், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கூறி வருகிறது. ஆனால், கேரள முதல்வர் விஜயன், கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் ஆகியோரிடம், இப்பிரச்னைகள் குறித்து பேசவில்லை. அதற்குமாறாக, சென்னைக்கு அழைத்து பிரச்னையே இல்லாத தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை என்ற நாடகத்தை நடத்தி கொண்டு இருக்கின்றனர்.
இவ்வாறு கூறினார்.நிர்வாகிகள், அவர்களது வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.