/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போலீசாரை பணி செய்ய விடாமல்தடுத்ததாக தந்தை, மகன் கைது
/
போலீசாரை பணி செய்ய விடாமல்தடுத்ததாக தந்தை, மகன் கைது
போலீசாரை பணி செய்ய விடாமல்தடுத்ததாக தந்தை, மகன் கைது
போலீசாரை பணி செய்ய விடாமல்தடுத்ததாக தந்தை, மகன் கைது
ADDED : மார் 23, 2025 01:20 AM
போலீசாரை பணி செய்ய விடாமல்தடுத்ததாக தந்தை, மகன் கைது
குளித்தலை,:குளித்தலை அடுத்த, இனுங்கூரில் டாஸ்மாக் கடை உள்ளது. அப்பகுதியில், நங்கவரம் எஸ்.எஸ்.ஐ., மதியழகன் மற்றும் பெண் போலீசார் நேற்று முன்தினம் காலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாரில் அரசு அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இவ்வாறு விற்பனை செய்யக்கூடாது என எஸ்.எஸ்.ஐ., மதியழகன் கூறினார்.
அப்போது மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த, இனுங்கூரை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தி.மு.க., செயலர் இளங்கோவன், 60, இவரது மகன் நவீன், 24, ஆகியோர் போலீசாரை தகாத வார்த்தையால் பேசி, பணி செய்யவிடாமல், கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து நங்கவரம் போலீசில் எஸ்.எஸ்.ஐ.. மதியழகன் கொடுத்த புகார்படி, அரசு அனுமதியில்லாமல் மது பாட்டில் விற்பனை செய்தும், போலீசாரை தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்த இளங்கோவன், அவரது மகன் நவீன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.