/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஈரோடு - செங்கோட்டை ரயில் இயக்கம் மாற்றம்
/
ஈரோடு - செங்கோட்டை ரயில் இயக்கம் மாற்றம்
ADDED : ஏப் 11, 2025 01:20 AM
ஈரோடு - செங்கோட்டை ரயில் இயக்கம் மாற்றம்
கரூர்:ஈரோடு, வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக, ஈரோடு- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மட்டும், இயக்கம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:ஈரோடு ரயில் வழித்தடத்தில், பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இந்த வழியாக செல்லும் சில ரயில் சேவைகளில் இன்று மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், திருச்சிராப்பள்ளி ரயில்வே ஸ்டேஷனில் காலை, 7:20 மணிக்கு புறப்படும் கரூர் - ஈரோடு
(எண்.56809 ) பயணிகள் ரயில், கரூர் ரயில்வே ஸ்டேஷனோடு நிறுத்தப்படும். அன்று மட்டும் கரூரில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் இயக்கப்படாது. செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (16846) காலை, 5:10 மணிக்கு புறப்பட்டு, கரூர் ரயில்வே ஸ்டேஷனோடு நிறுத்தப்படும். செங்கோட்டையிலிருந்து கரூர் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும்.
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மதியம், 2:00 மணிக்கு புறப்படும் ஈரோடு- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில், கரூரில் இருந்து பகல், 3:05 மணிக்கு புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

