/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பங்குனி திருவிழாவை முன்னிட்டுதேர் தயார் செய்யும் பணி மும்முரம்
/
பங்குனி திருவிழாவை முன்னிட்டுதேர் தயார் செய்யும் பணி மும்முரம்
பங்குனி திருவிழாவை முன்னிட்டுதேர் தயார் செய்யும் பணி மும்முரம்
பங்குனி திருவிழாவை முன்னிட்டுதேர் தயார் செய்யும் பணி மும்முரம்
ADDED : ஏப் 11, 2025 01:23 AM
பங்குனி திருவிழாவை முன்னிட்டுதேர் தயார் செய்யும் பணி மும்முரம்
கரூர்:பங்குனி திருவிழாவை முன்னிட்டு, கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேர், சுத்தம் செய்து பெயின்ட் அடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடந்து வருகிறது.
இன்று ( 11ம் தேதி) தேரோட்டம், நாளை தீர்த்தவாரி, 13ல் ஆளும் பல்லாக்கு, 14ல் ஊஞ்சல் உற்சவம், 15ல் வெள்ளி வாகனத்தில் உற்சவர் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தேர் திருவிழா நடைபெறும் என்பதால், மீதமுள்ள நாட்கள் தேர் பூட்டியே கிடக்கும். இதனால், தேர் துாசு படிந்து பொலிவிழந்து காணப்படும்.
எனவே, திருவிழாவிற்கு முன், தேரை சுத்தம் செய்யும் பணியில் கோவில் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தேருக்கு வார்னிஸ் அடிக்கும் பணி, தேர் சக்கரங்களை சரி செய்யும் பணி நடந்து வருகிறது.