/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கால்நடை ஆராய்ச்சி மையத்தில் முட்டை இலவச பயிற்சி முகாம்
/
கால்நடை ஆராய்ச்சி மையத்தில் முட்டை இலவச பயிற்சி முகாம்
கால்நடை ஆராய்ச்சி மையத்தில் முட்டை இலவச பயிற்சி முகாம்
கால்நடை ஆராய்ச்சி மையத்தில் முட்டை இலவச பயிற்சி முகாம்
ADDED : ஆக 28, 2025 01:57 AM
கரூர், கரூர், பண்டுதகாரன்புதுார் அரசு கால்நடை பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நாளை (29ல்) இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.
இதுகுறித்து, ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர், பண்டுதகாரன் புதுார் கால்நடை பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், முட்டையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் என்ற தலைப்பில், கால்நடை துறை பேராசிரியர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். அதில் விவசாயிகள், கோழி பண்ணையாளர்கள், சுய தொழில் முனைவோர், ஊரக மகளிர் ஆகியோர் பங்கேற்கலாம். நாளை காலை, 10:30 மணிக்கு முகாம் தொடங்குகிறது. இதில் பங்கேற்ற விருப்பம் உள்ளவர்கள், 04324-294335 மற்றும் 73390-57073 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.