/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ராசிமணலில் அணை கட்ட கோரிக்கை நம்மை பாதிக்கும்: விவசாய சங்கம் 'திடுக்'

ADDED : செப் 08, 2024 07:33 AM
கரூர்: ராசி மணலில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நம்மை பாதிக்கும் என, காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசுடன் கலக்காமல், ராசி மணலில் அணை கட்ட வேண்டும் என, தனியார்கள் போராட வேண்டாம். தமிழக மக்களின்
பெரும்பான்மை முடிவு, மேகதாதுவில் அணை கட்ட கூடாது என்பது தான். 50 ஆண்டு கால போராட்டத்தை வலுவிலக்க செய்ய
வேண்டாம். முதல்வர் ஸ்டாலின், அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், காவிரியை காக்க அவர் எடுக்கும் முடிவுக்கு
உறுதுணையாக இருப்போம். ராசி மணலிலும் அணை வேண்டாம். மேகதாதுவில் நிச்சயம் அணை வேண்டாம்.ராசி மணலில் அணை கட்ட வேண்டும் என்ற, நாம் எழுப்பும் கோரிக்கை, நம்மை பாதிக்கும். தமிழகம் ராசி மணலில் அணை
கட்டட்டும், மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டட்டும் எனக்கூறி ஏமாற்றி விடுவார்கள். முதல்வர் தமிழகம் திரும்பும் வரை,
அணை பற்றி கர்நாடகா தலைவர்களிடம் பேச வேண்டாம். மேலும், காவிரி கட்டளை, வைகை - குண்டாறு இணைப்பு
திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.