/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : மார் 20, 2024 01:48 AM
கரூர்:கரூர்
மாவட்டம், கடவூர் தாலுகா, தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லுாரியில், மாதிரி வாக்குச்சாவடி மையம் மற்றும் மின்னணு
ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து, புதிய வாக்காளர்களுக்கு
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
இளம்பரிதி தலைமை வகித்தார். லோக்சபா தேர்தலை ஒட்டி, மின்னணு
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி,
வாக்குச்சாவடி மையத்தின் தோற்றம் எவ்வாறு அமைந்திருக்கும்,
வாக்குச்சாவடி மையத்தில் எப்படி பெயர்களை பதிவு செய்வது,
வாக்களித்ததை உறுதி செய்வது எவ்வாறு என்று, புதிய வாக்காளர்களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் ஹேமா நளினி, துணை தாசில்தார் சத்தியமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.