/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிரதான சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள்
/
பிரதான சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள்
ADDED : மார் 22, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் - சேலம் பழைய சாலையில் வாங்கப்பாளையம் பிரிவு உள்ளது.
வெங்கமேடு, குளத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, செம்மடை பகுதிகளுக்கு நாள்தோறும் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகிறது. இதனால், வாங்கப்பாளையம் பிரிவில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்நிலையில், வாங்கப்பாளையம் பிரிவு பகுதியில், பிரதான சாலையில் பல மணி நேரம் வேன், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. அதை தடுக்க, வாங்கப்பாளையம் பிரிவு பகுதியில், வாகனங்களை நிறுத்துவோர் மீது, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

