மனநலம் பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
மனநலம் பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
ADDED : ஏப் 19, 2024 06:41 AM
அ நிறம் | அளவு
குளித்தலை : குளித்தலை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சுற்றித்திரிந்த, 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி வந்தார்.
சமூக ஆர்வலர்கள் கொடுத்த தகவல்படி, கடந்த பிப்., 22ல் சாந்திவனம் மனநல காப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் மற்றும் மருத்துவக்குழுவினர், அவரை மீட்டு மருத்துவ கிசிச்சை அளித்தனர்.விசாரணையில் சேலம் மாவட்டம், அடுத்த தாதகம்பட்டி தமிழ்ச்செல்வன், 45, என்றும். அவருடைய மனைவி சித்ரா எனவும், மூன்று மகன்கள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சாந்திவனம் மனநல காப்பத்தினர் நேரில் வீட்டிற்கு சென்று மனைவி சித்ரா, மகன்களிடம் தமிழ்ச்செல்வனை ஒப்படைத்தனர்.
