தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மனநலம் பாதித்தவரை காப்பகத்தினர் மீட்டனர்

மனநலம் பாதித்தவரை காப்பகத்தினர் மீட்டனர்

மனநலம் பாதித்தவரை காப்பகத்தினர் மீட்டனர்


ADDED : மே 23, 2024 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2024 06:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை : குளித்தலை அடுத்த, கடவூர் கீழப்பகுதி பஞ்., தே.இடையபட்டியில், 35 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர் சுற்றித்திரிவதாகவும், அவ்வபோது கூச்சலிட்டு கொண்டும், கைகளில் கிடைக்கின்ற கல் முதலானவற்றை எடுத்து பொதுமக்கள் மீது எறிவதாகவும், போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி வந்தார்.

இவரை மீட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என, கடவூர் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் சேகர், சாந்திவனம் மனநலம் காப்பகத்தின் இயக்குனருக்கு தகவல் கொடுத்தார்.இதையடுத்து, சாந்திவனம் மீட்பு குழுவினரான ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் சித்ரா மற்றும் மேற்பார்வையாளர் வேல்முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர், பாதிக்கப்பட்ட நபரை மீட்டு, திருச்சி தில்லைநகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குணமடைந்தவுடன், அவர் குடும்பத்தாருடன் ஒப்படைக்கப்படுவார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us