ADDED : மே 30, 2024 01:09 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம், கிழக்கு காலனி கிராமத்தில் பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜைகள்
நடந்தது.
கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனி கிராமத்தில் பகவதியம்மன் கோவில் உள்ளது. கோவில் திருவிழாவை முன்னிட்டு, பகவதியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு பூஜைகள் செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை கிடா வெட்டுதல், கோழி அறுத்தல், மா விளக்கு, பொங்கல் வைத்தல், ஆகிய நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்றனர்.
