தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கல்குவாரியில் மூழ்கிய பள்ளி மாணவர் பலி

கல்குவாரியில் மூழ்கிய பள்ளி மாணவர் பலி

கல்குவாரியில் மூழ்கிய பள்ளி மாணவர் பலி


ADDED : அக் 04, 2024 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2024 01:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்குவாரியில் மூழ்கிய

பள்ளி மாணவர் பலி

கரூர், அக். 4-

கரூர் அடுத்த ஆலம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ராகுல், 14, ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டு தேர்வு விடுமுறை தினம் என்பதால், ராகுல் தனது நண்பர்கள் இருவருடன் விளையாட நேற்று சென்றுள்ளார். அப்போது அருகிலுள்ள, ஆத்துார் பெரும்பாறை என்ற இடத்தில் பழைய கைவிடப்பட்ட கல்குவாரியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் இயற்கை உபாதைக்கு பின், சுத்தம் செய்ய சென்ற போது நீரில் மூழ்கியுள்ளார்.

நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், நண்பர்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து, கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள், சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடிய நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் ராகுல் உடலை மீட்டனர். வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us