/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக்கில் இருந்து விழுந்த சிறுவன் பலி
/
பைக்கில் இருந்து விழுந்த சிறுவன் பலி
ADDED : டிச 13, 2024 01:19 AM
குளித்தலை, டிச. 13-
பைக்கில் இருந்து விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தார்.
குளித்தலை அடுத்த, இனுங்கூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் பார்த்திபன், 27. இவர் தனக்கு சொந்தமான ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கில், அதே ஊரை சேர்ந்த பாலமுருகன், 16, என்பவரை அழைத்துக் கொண்டு கடந்த, 9 மாலை 6:00 மணி யளவில் பெட்டவாய்த்தலை சென்று கொண்டிருந்தார். கோட்டையார் தோட்டம் அருகே, மாடு குறுக்கே வரவே, அதன் மீது மோதாமல் இருக்க, பார்த்திபன் சாலை ஓரத்தில் ஓட்டியபோது, பைக் கீழே விழுந்தது.
இதில் பின்னால் அமர்ந்து வந்த பாலமுருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று பாலமுருகன் இறந்தார். இது குறித்து அவரது தாயார் சரோஜா அளித்த புகார்படி, பைக் ஓட்டிய பார்த்திபன் மீது, நங்கவரம் எஸ்.ஐ., சரவணகிரி வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறார்.

