ADDED : ஜன 18, 2025 01:25 AM
தகராறில் தாக்குதல் இருதரப்பு மீது வழக்கு
குளித்தலை, : குளித்தலை அடுத்த வரவனை பஞ்., கோட்டபுளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகலட்சுமி, 35; கூலித்தொழிலாளி. இவரது வீட்டின் முன், அதே பகுதியை சேர்ந்த ஆராயி, இவரது மகன் கோபிநாத் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அதே ஊரை சேர்ந்த சிவக்குமார், 48, அவரது மகள் கீர்த்தி, 19, ஆகிய இருவரும் டூவீலரில் சென்றுள்ளனர். அப்போது, 'ஏன் இப்படி வேகமாய் செல்கிறீர்கள்' என, ஆராயி மற்றும் கோபிநாத் கேட்டுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில், சிவக்குமார் அவரது மகள் கீர்த்தி, உறவினர் மணிவண்ணன், 29, கவி, 23, பிரவீன், 30 உள்ளிட்ட, 8 பேர் ஆராயி, கோபிநாத், நாகலட்சுமி ஆகியோரை தாக்கி உள்ளனர்.
இதுகுறித்து, நாகலட்சுமி கொடுத்த புகார்படி, 8 பேர் மீதும், சிவக்குமார் கொடுத்த புகார்படி, 8 பேர் மீதும், சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
