/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி அணையில் இருந்துதண்ணீர் திறப்பு குறைப்பு
/
அமராவதி அணையில் இருந்துதண்ணீர் திறப்பு குறைப்பு
ADDED : ஜன 18, 2025 01:28 AM
கரூர்,: திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 126 கன அடியாக குறைந்தது.
இதனால், அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட, 400 கன அடி தண்ணீர் வினாடிக்கு, 300 கன அடியாக நேற்று
குறைக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், 400 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 83.67 அடியாக இருந்தது.
மாயனுார் கதவணை
கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 5,359 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அதில், சம்பா சாகுபடி அறுவடை பணிக்காக, 4,509 கன அடி தண்ணீர்
திறக்கப்பட்டது. மூன்று பாசன வாய்க்காலில், 850 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 25.46 அடியாக இருந்தது. நொய்யல் பாசன
வாய்க்காலில் தண்ணீர் திறப்பு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.