/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநில அளவிலான கபடிவெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
/
மாநில அளவிலான கபடிவெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ADDED : ஜன 19, 2025 01:49 AM
மாநில அளவிலான கபடிவெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
குளித்தலை, :குளித்தலை அடுத்த, பாலவிடுதி பஞ்,. கஸ்துாரி குருவம்பட்டியில், பொங்கல் திருநாளையொட்டி கலைமான் கபடி குழு மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து, 40ம் ஆண்டு மாநில அளவிலான தொடர் கபடி போட்டியை, மாரியம்மன் கோவில் முன் மூன்று நாட்கள் நடத்தியது.
கிராம முக்கியஸ்தர்கள் குமரவேல், பெரியசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து, 50 அணிகள் கலந்து கொண்டன. கோவக்காரன்பட்டி, பாரதி இளைஞர் நற்பணி மன்றம் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது. இந்த அணிக்கு, 30 ஆயிரம் ரூபாய், சுழல் கோப்பை, இரண்டாவது பரிசாக காரணம்பட்டி வ.உ.சி., கபடி குழு பெற்றது. இந்த அணிக்கு, 20 ஆயிரம் ரூபாய், சுழல் கோப்பை, மூன்றாவது பரிசாக திண்டுக்கல் மாவட்டம், சாணிப்பட்டி ஜி.இ.டி., பிரதர்ஸ் அணி, 10 ஆயிரம் ரொக்க பணம், சுழல் கோப்பை, நான்காவது பரிசாக திருச்சி மாவட்டம், புது மணியாரம்பட்டி கபடி குழுவிற்கு, 5,000 ரூபாய்
வழங்கப்பட்டது.