/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெடுஞ்சாலையில் தெரு விளக்குஅமைக்க மக்கள் வேண்டுகோள்
/
நெடுஞ்சாலையில் தெரு விளக்குஅமைக்க மக்கள் வேண்டுகோள்
நெடுஞ்சாலையில் தெரு விளக்குஅமைக்க மக்கள் வேண்டுகோள்
நெடுஞ்சாலையில் தெரு விளக்குஅமைக்க மக்கள் வேண்டுகோள்
ADDED : ஜன 19, 2025 01:50 AM
நெடுஞ்சாலையில் தெரு விளக்குஅமைக்க மக்கள் வேண்டுகோள்
குளித்தலை, :குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்சாயத்து, கோட்டைமேடு பெட்டவாய்த்தலை ராணி மங்கம்மாள் நெடுஞ்சாலையில், கூடலுார் முதல் மேட்டு மருதுார்- குமாரமங்கலம் நான்கு ரோடு வரை தெருவிளக்கு மின் கம்பங்கள் உள்ளன. இவை போதுமானதாக இல்லை.
மருதுார் ரயில்வே குகை வழிப்பாதை பணி நடந்து வருவதால், இச்சாலையை பயன்படுத்தி வரும் பல்வேறு கிராம மக்கள், ராணி மங்கம்மாள் நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் சென்று வருகின்றனர். இரு புறங்களிலும் விவசாய நிலங்கள் இருப்பதால், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. பொதுமக்கள் பாதிக்காத வகையில் டவுன் பஞ்,. நிர்வாகம், ராணி மங்கம்மாள் நெடுஞ்சாலையில் கூடுதலாக தெரு விளக்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.