/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இறந்த மூதாட்டியின் சடலம் அடையாளம் காணப்பட்டது
/
இறந்த மூதாட்டியின் சடலம் அடையாளம் காணப்பட்டது
ADDED : ஜன 24, 2025 01:15 AM
இறந்த மூதாட்டியின் சடலம் அடையாளம் காணப்பட்டது
அரவக்குறிச்சி, :அரவக்குறிச்சி அருகே, இறந்த மூதாட்டியின் அடையாளம் தெரிந்துள்ளது.அரவக்குறிச்சி அருகே, பழனியப்ப கவுண்டன் வலசு பகுதியில், தனியார் தோட்டம் அருகே அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடல் கடந்த, 6ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. உடலை அடையாளம் காண்பதற்காக, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் இருப்பு வைத்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக, சேந்தமங்கலம் கீழ்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் ரமாதேவி, அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் புகார்
அளித்திருந்தார்.இதனிடையே மூதாட்டியை காணவில்லை என, இடையகோட்டை போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், இறந்த மூதாட்டி திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், டி.புதுக்கோட்டை அருகே உள்ள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த பழனிசாமி மனைவி குஞ்சம்மாள், 75, என்பது தெரிய வந்தது. இதையடுத்து, மூதாட்டியின் உடல் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டது.இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

