ADDED : ஜன 24, 2025 01:15 AM
அ நிறம் | அளவு
தங்கை மாயம்; அக்கா புகார்
குளித்தலை, :குளித்தலை அடுத்த, வில்லுகாரன்பட்டியை சேர்ந்தவர் அபிநயா, 21. இவரது தங்கை ரக் ஷயாஸ் கோவை ஒண்டிப்புதுார் அரசு மகளிர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர் கடந்த, 19 மாலை 4:00 மணியளவில் குளித்தலையில் இருந்து, கோவைக்கு பஸ்சில் சென்றார்.ஆனால் மாணவி கோவை வீட்டிற்கு செல்லாமல், எங்கேயோ சென்று விட்டதாகவும், காணாமல் போன அவரை கண்டுபிடித்து தருமாறு, அவரது அக்கா அபிநயா கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
