தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/வரத்து அதிகரிப்பால் உருளை கிழங்கு விலை குறைவு

வரத்து அதிகரிப்பால் உருளை கிழங்கு விலை குறைவு

வரத்து அதிகரிப்பால் உருளை கிழங்கு விலை குறைவு


ADDED : ஜன 25, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2025 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வரத்து அதிகரிப்பால் உருளை கிழங்கு விலை குறைவு

கரூர், :வட மாநிலங்களில் இருந்து, உருளை கிழங்கு வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்து வருகிறது.

நாட்டில், உருளை கிழங்கு உற்பத்தியில் உத்தர பிரதேசம், மேற்கு வங்க மாநிலம் முன்னணியில் உள்ளது. அதை தவிர, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களிலும், உருளை கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மலைப்

பகுதிகளில் சாகுபடி நடக்கிறது.இந்நிலையில் கடந்தாண்டு இறுதியில், வட மாநிலங்களில் இருந்து உருளை கிழங்கு குறைந்தளவில் தமிழகத்துக்கு வந்தது. இதனால், ஒரு கிலோ உருளை கிழங்கு, 70 ரூபாய் வரை விற்றது. ஆனால் ஜனவரி மாத துவக்கத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில், உருளை கிழங்கு சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் அறுவடை துவங்கியது. மேலும், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தில் தற்போது அறுவடை தொடங்கிய நிலையில், உருளை கிழங்கு வரத்து கரூர் உழவர் சந்தை மற்றும் காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு மேலும் அதிகரித்துள்ளது. இதனால், விலை கணிசமான அளவில் குறைந்துள்ளது.

இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், 'கடந்தாண்டு, இதே சீசனில் ஒரு கிலோ உருளை கிழங்கு, 50 முதல், 60 ரூபாயாக இருந்தது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக, ஒரு கிலோ, 40 முதல், 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us