/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மத்திய அரசின் பட்ஜெட்டைஎதிர்த்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசின் பட்ஜெட்டைஎதிர்த்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் பட்ஜெட்டைஎதிர்த்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் பட்ஜெட்டைஎதிர்த்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 09, 2025 01:01 AM
மத்திய அரசின் பட்ஜெட்டைஎதிர்த்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
கரூர், :கரூர் மாவட்ட இ.கம்யூ., கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் நாட்ராயன் தலைமையில், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, தலைமை தபால் நிலையம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், மத்திய பா.ஜ., அரசு பட்ஜெட்டில், தமிழகத்துக்கு உரிய நிதி ஒதுக்காததை கண்டித்தும், தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. பிறகு, மத்திய பா.ஜ., அரசின் பட்ஜெட் நகலை, இ.கம்யூ., கட்சியினர் எரிக்க முயன்றனர். அப்போது, போலீசார் தடுத்து நிறுத்தி, பட்ஜெட் நகலை பறித்தனர். ஆர்ப்பாட்டத்தில், இ.கம்யூ., கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.