தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சிகிச்சையில் உயிரிழந்த ரவுடியின்உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

சிகிச்சையில் உயிரிழந்த ரவுடியின்உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

சிகிச்சையில் உயிரிழந்த ரவுடியின்உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு


ADDED : பிப் 15, 2025 02:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2025 02:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிகிச்சையில் உயிரிழந்த ரவுடியின்உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சையின் போது உயிரிழந்த ரவுடியின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை கருப்பத்துார் பகுதியை சேர்ந்தவர் சங்கர், 35, ரவுடி. இவர் மீது, 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த, 6ல், நாகராஜ் என்பவரை கத்தியால் குத்திய வழக்கில், சங்கரை லாலாப்பேட்டை போலீசார் கைது செய்ய முயன்றனர்.

அப்போது, தப்பி ஓடிய போது சங்கர், தவறி விழுந்ததில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.இதனால், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சங்கர், சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். இதையடுத்து, சங்கர் சாவில் மர்மம் உள்ளதாக கூறி, அவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். கரூர் ஏ.டி.எஸ்.பி., பிரேம் ஆனந்த், டி.எஸ்.பி.,க்கள் செல்வராஜ், செந்தில் குமார் ஆகியோர், சங்கரின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பலன் அளிக்கவில்லை.

தொடர்ந்து, கரூர் ஜே.எம்.,-1 நீதிபதி பரத்குமார், நேற்று முன்தினம் மாலை சங்கரின் உடலை பார்வையிட்டு, உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில், சங்கரின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் சம்மதித்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு சங்கரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us