தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/அரசு புறம்போக்கு நிலத்தில்வெடி வைத்து கற்கள் வெட்டல்

அரசு புறம்போக்கு நிலத்தில்வெடி வைத்து கற்கள் வெட்டல்

அரசு புறம்போக்கு நிலத்தில்வெடி வைத்து கற்கள் வெட்டல்


ADDED : பிப் 18, 2025 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 01:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு புறம்போக்கு நிலத்தில்வெடி வைத்து கற்கள் வெட்டல்

ஓசூர் தொரப்பள்ளி அடுத்த கொல்லப்பள்ளி கிராம மக்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

கொல்லப்பள்ளி கிராமத்தில் அரசின் புறம்போக்கு நிலம், 3 ஏக்கர் உள்ளது. அந்த இடத்தை சுற்றி, 22 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தில் கற்களை வெட்டி எடுப்பதால், அதன் துகள்கள் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதோடு, விவசாய நிலத்தில் பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக, ஓசூர் சப்-கலெக்டருக்கு கடந்த நவ., 6ல் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இன்றளவும் கற்கள் வெடி வைத்து வெட்டி எடுப்பதால், கடந்த, 3 மாதங்களாக விவசாயம் செய்ய முடியாமல், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அரசு புறம்போக்கு நிலத்தில் வெடி வைத்து கற்களை வெட்டி எடுப்பதை, மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us