தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் குறைதீர் கூட்டம்நலத்திட்ட உதவி வழங்கல்

கரூரில் குறைதீர் கூட்டம்நலத்திட்ட உதவி வழங்கல்

கரூரில் குறைதீர் கூட்டம்நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : பிப் 18, 2025 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 01:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூரில் குறைதீர் கூட்டம்நலத்திட்ட உதவி வழங்கல்

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது.

இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கிக்கடன்கள், பட்டா மாறுதல், ஜாதி சான்று, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை. உதவி உபகரணங்கள். குடிநீர் வசதி. சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் என, 423 மனுக்கள் வரப்பெற்றன.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிறப்பு சாய்வு நாற்காலி, 6,700 ரூபாய்- மதிப்பீட்டிலும், 12 காது கேளாத நபர்களுக்கு, 24 காதொலி கருவிகள், 78,840 ரூபாய்- மதிப்பீட்டிலும் என மொத்தம், 26 பயனாளிகளுக்கு, 86,040 ரூபாய்- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

டி.ஆர்.ஓ., கண்ணன், சப்-கலெக்டர் பிரகாசம், கலெக்டர் நேர்முக உதவியாளர் (நிலம்) பச்சமுத்து, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சக்திபாலகங்காதரன், மாவட்ட வழங்கள் அலுவலர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us