தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சாலை பராமரிப்பு பணியாளர்கள்எம்.எல்.ஏ.,விடம் மனு வழங்கல்

சாலை பராமரிப்பு பணியாளர்கள்எம்.எல்.ஏ.,விடம் மனு வழங்கல்

சாலை பராமரிப்பு பணியாளர்கள்எம்.எல்.ஏ.,விடம் மனு வழங்கல்


ADDED : பிப் 20, 2025 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 02:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாலை பராமரிப்பு பணியாளர்கள்எம்.எல்.ஏ.,விடம் மனு வழங்கல்

குளித்தலை: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில், எம்.எல்.ஏ., மாணிக்கத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கரூர் மாவட்ட தலைவர் ஞானசேகர் தலைமையில், சங்க பொறுப்பாளர்கள் கையொப்பமிட்டு கோரிக்கை மனுவாக அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்கப்படும் என கடந்த, 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் நான்கு ஆண்டுகளில், பல கட்ட போராட்டங்கள் நடத்திய பின்பும், இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் சாலை பணியாளர்களின், 41 மாத பணி காலத்தை கருத்தியலான ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கு கணக்கில் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் நிறுத்தம் செய்யப்பட்ட சம்பளத்தை விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us