/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மரவள்ளிக்கிழங்கு சாகுபடிகளை எடுக்கும் பணி தீவிரம்
/
மரவள்ளிக்கிழங்கு சாகுபடிகளை எடுக்கும் பணி தீவிரம்
ADDED : பிப் 22, 2025 01:48 AM
மரவள்ளிக்கிழங்கு சாகுபடிகளை எடுக்கும் பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மரவள்ளிக்கிழங்கு சாகுபடி பயிர்களில் களை எடுக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, புனவாசிப்பட்டி, கணக்கம்பட்டி, மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், சிவாயம், குழந்தைப்பட்டி, மலையாண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். மரவள்ளிக்கிழங்கு குச்சிகள் நடவு செய்து, கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
தற்போது பயிர்கள் நடுவில், அதிகமான களைகள் முளைத்து வருவதால் செடிகள் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விவசாய தொழிலாளர்களை கொண்டு மரவள்ளிக்கிழங்கு செடிகள் நடுவில் வளர்ந்து வரும் களைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.