/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போக்குவரத்து பணிமனை முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
போக்குவரத்து பணிமனை முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து பணிமனை முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து பணிமனை முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 01, 2025 01:32 AM
போக்குவரத்து பணிமனை முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர்:தமிழ்நாடு செந்தாரகை அரசு போக்கு வரத்து தொழிலாளர்கள், கரூர் மண்டல கிளை சார்பில், மண்டல தலைவர் செந்தில்குமார் தலைமையில், திருமாநிலையூர் போக்கு
வரத்து பணிமனை முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை படிக்க தெரியாத கரூர் கிளை-2 மேலாளர் செல்லப்பன், அரவக்குறிச்சி கிளை மேலாளர் கார்த்தி கேயன் ஆகியோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், கூடுதல் பணிக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும், டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் பாரதிதாசன், பொதுச்செயலாளர் சிறும்பண்ணன், துணைத்தலைவர் சிவக்குமார், மண்டல செயலாளர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.